40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகிறார் ஆங் சான் சூ கி!
நாபிதா: மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவரான ஆங் சான் சூ கி, 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வர உள்ளார்.
மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஆங் சான் சூ கி(67). இவரது தாயார் கிஹின் கை, கடந்த 1960ம் ஆண்டு இந்தியாவிற்கான மியான்மர் நாட்டு தூதராக நியமிக்கப்பட்டார். இதனால் ஆங் சான் சூ கி டெல்லியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 1964ம் ஆண்டு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் ஆங் சான் சூ கி, பட்டம் பெற்றார்.
அதன்பிறகு நாடு திரும்பிய சூ கி, தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். ஆனால் கடந்த 1989 முதல் 2010ம் ஆண்டு வரை வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவராக உள்ள சூ கியை, இந்த ஆண்டு மியான்மர் சுற்றுப்பயணத்தின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பை ஏற்று அடுத்த மாதம்(நவம்பர்) 13ம் தேதி சூ கி இந்தியாவுக்கு வர உள்ளார். தனது ஒரு வார சுற்றுப்பயணத்தின் போது, நவம்பர் 14ம் தேதி ஜவஹர்லால் நேரு நினைவு சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications