வரும் 30ம் தேதி தேவர் குருபூஜை-நெல்லையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
நெல்லை: வரும் 30ம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இருந்து 300 வாகனங்களில் தொண்டர்கள் பசும்பொன் செல்கின்றனர். இதனால் வாகனங்களில் செல்வோருக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வரும் 30ம் தேதி தேவர் குருபூஜை நடக்கிறது. இதையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் வாகனங்களில் செல்ல உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவர் பேரவை, தென்மண்டல தேவர் இயக்கம் போன்ற அமைப்புகள் சார்பில் 300 மேற்பட்ட வாகனங்களில் ஏராளமானோர் பசும்பொன் செல்கின்றனர்.
இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக எஸ்.பி. விஜேயந்திர பிதாரி, சப் டிவிஷன் வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
ஆலோசனை கூட்டத்தின் முடிவில் வாகனங்களில் செல்வோர் போலீஸ் முன் அனுமதி பெற வேண்டும். பேனர்கள், ஸ்பீக்கர் பாக்ஸ் கட்ட கூடாது. வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து செல்ல கூடாது. கோஷங்கள் மற்றும விசில் ஓலி எழுப்ப கூடாது. போலீசார் அனுமதிக்கும் வழிகளில் மட்டுமே வாகனங்களில் செல்ல வேண்டும். அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து செல்லக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications