பிடல் காஸ்ட்ரோவிற்கு பக்கவாதநோயா? அப்பட்டமான வதந்தி என்கிறார் சகோதரி

புரட்சியாளரும் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் பிடெல் காஸ்ட்ரோ(86) விற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஆட்சி பொறுப்பை சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார். ஆனால் அவரைப்பற்றி தினம் தினம் ஏதாவது ஒரு செய்திகள் வெளியாகி வருகின்றது.
காஸ்ட்ரோ பக்கவாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தன்னை சுற்றியுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுவதாகவும் பேச முடியாத நிலையில் காஸ்ட்ரோ உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகின்ற மருத்துவர் ஜோஸ் மார்க்குயினா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்த தகவலை காஸ்ட்ரோவின் சகோதரியும், அவருடைய மகனும் மறுத்துள்ளனர். வெனிசுலா நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஜுவனிதா காஸ்ட்ரோ இது அப்பட்டமான வதந்தி என்று கூறியுள்ளார். இதேபோல காஸ்ட்ரோவின் மகனும், தனது தந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறியுள்ளார்.
உடல்நலக்குறைவினால் 2008ம் ஆண்டு காஸ்ட்ரோ பதவி விலகிய பின்னர், இன்று வரை இவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் ஜனாதிபதியாக பதவியில் உள்ளார். இருப்பினும் தொடர்ந்து படித்துக் கொண்டும், கட்டுரைகள் எழுதியவாறும் இருந்தார். வெனிசுலா நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட சாவேஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் காஸ்ட்ரோ.
இதற்கிடையில் கியூபாவிலும் அமெரிக்காவிலும் காஸ்ட்ரோ இறந்து விட்டார் என்றும் கோமா நிலைக்கு சென்று விட்டார் எனவும் சில பத்திரிக்கைகள் பல மாதங்களாக வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications