நகைக் கடை ஊழியரை கொன்று 3 கிலோ நகைகள் கொள்ளை- சிசிடிவி கேமிராவும் அபேஸ்
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் நகை மற்றும் அடகுக் கடை ஊழியரைக் கொன்று 3 கிலோ நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை மடிப்பாக்கம் சதாசிவம்நகரில் ஸ்ரீ பாலாஜி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக் கடையும் அடகுக் கடையும் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கடையில் மதன்சிங் என்பவர் வேலை பார்த்து வந்தார். கடை உரிமையாளரான மோகன்லால் நேற்று பிற்பகல் சாப்பிட சென்ற போது மதன்சிங் மட்டும் கடையில் இருந்துள்ளார். மாலை 5.30 மணியளவில் பக்கத்து கடைக்காரர் நகைக் கடையை எட்டிப் பார்த்த போது மதன்சிங் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்திருக்கிறார். இதுபற்றி மோகன்லாலுக்கு தகவல் கொடுக்க அவர் போலீசிடம் புகார் செய்தார்.
சம்பவ இடத்துக்குப் போலீசார் விரைந்து சென்று நடத்திய விசாரணையில் மோகன்லாலில் நகைக் கடை மற்றும் அடகுக் கடையில் இருந்த அனைத்து நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. சுமார் 3 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்,
கொள்ளையர்கள் தப்பி செல்லும்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும், அது தொடர்பான உபகரணங்களையும் நகைகளோடு எடுத்துக்கொண்டு போய்விட்டனர்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications