துக்கையாண்டி மனைவியைக் கைது செய்தது போலீஸ்.. பெங்களூரில் சிக்கினார்
சென்னை: நில மோசடி வழக்கில் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர். பெங்களூரில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
சென்னை நீலாங்கரை அருகேயுள்ள பனையூர், உத்தண்டி பகுதிகளில் உள்ள ரூ.12 கோடி மதிப்புள்ள 12 கிரவுண்டு நிலத்தை அபகரித்து, அதில் பங்களா கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக முன்னாள் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி மீது புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக மும்பை மற்றும் டெல்லியை சேர்ந்த நில உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில், சுப்புலட்சுமி, துக்கையாண்டியின் மகள்கள் யாமினி, யுபா மற்றும் உறவுப்பெண் தனலட்சுமி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், துக்கையாண்டி சேர்க்கப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக அவர் முன்ஜாமீன் வாங்கியுள்ளார். தினசரி மத்திய குற்றப் பிரிவு போலீஸ் முன்பு ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
துக்கையாண்டியன் மகள்கள் இருவரும் அமெரிக்காவில் தங்கியுள்ளனர். அவர்களில் யாமினிக்கு மட்டும் முன்ஜாமீன் கிடைத்துள்ளது. சுப்புலட்சுமியும், தனலட்சுமியும் தலைமறைவாக இருந்தனர். இவர்களுக்கு முன்ஜாமீ்ன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், பெங்களூரில் வைத்து சுப்புலட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு சுப்புலட்சுமி கைதானதாக கூறப்படுகிறது. இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications