மல்லையாவுக்கு வந்த சோகத்தைப் பாருங்கள்... இனி அவர் 'பில்லியனர்' இல்லையாம்!

போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலக மகா பெரும் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மல்லையாவின் பெயர் 73வது இடத்திற்குப் போய் விட்டது. அவரது சொத்து மதிப்பு தோராயமாக ரூ. 4285 கோடி என்று கூறப்பட்டுள்ளது. அதாவது 800 மில்லியன் டாலராகும்.
2011ம் ஆண்டு இதே காலகட்டத்தில் அவர் 1.1 பில்லியன் சொத்துடன் 49வது இடத்தில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் அவருக்கு இப்போது நேரம் சரியல்லை என்பதாலும், அவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் பெருத்த சரிவையும், நஷ்டத்தையும், சவால்களையும் சந்தித்து தொய்ந்து போய்க் கிடப்பதாலும் மல்லையாவின் சொத்தும் இறங்கி வந்து விட்டது. ஒரு பில்லியனுக்கும் குறைவான சொத்துக்கு மல்லையா இறங்கிப் போய் விட்டதால் அவர் பில்லியனர் அந்தஸ்தை இழந்து விட்டார்.
இருப்பினும் கெட்டதிலும் ஒரு நல்ல விஷயமாக, ஜெட் ஏர்வேஸ் அதிபர் நரேஷ் கோயலை விட பணக்காரராக தொடர்கிறார் மல்லையா. கோயல், 94வது இடத்தில் இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலராகும்.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2 பில்லியன் டாலர் நஷ்டத்தில் மூழ்கியிருப்பதாகவும், இதுவே மல்லையாவின் இறக்கத்திற்குக் காரணம் என்றும் போர்ப்ஸ் கூறியுள்ளது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளமே தராமல் இழுத்தடித்து வருகிறார் மல்லையா. அதேசமயம், அவரும், அவரது மகனும் நாடு நாடாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications