சென்னையில் ஓடும் பஸ்சில் 5 கிலோ நகை கொள்ளை வழக்கு: 4 பேர் கைது-191 சவரன் மீட்பு
சென்னை: சென்னையில் கடந்த 29.8.2012 அன்று ஓடும் பஸ்சில் 5 கிலோ நகைகளை கொள்ளை போன வழக்கில் தொடர்புடைய 4 பேரை, போலீசார் மும்பையில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 191 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.
மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த ஆம்னி பஸ்சில் பயணித்த நகைக்கடை ஊழியர் மனோஜ், கே.பி.சிங் ஆகியோரிடம் இருந்து கடந்த 29.8.2012 அன்று 5 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது. இது குறித்த புகாரின் பேரில், பீர்க்கன்கரணை போலீசார் விசாரித்து வந்தனர்.
கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் தனராஜ், இன்ஸ்பெக்டர்கள் சகாதேவன், ஜோக்கிம்ஜெரி ஆகியோர் தலைமையில் இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
நகையை பறிக்கொடுத்த வியாபாரிகளிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் நகைகளை மும்பையில் இருந்து வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து வியாபாரிகளிடம் நகை இருப்பதை அறிந்த கும்பல், மும்பையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
மும்பையில் இருந்து வந்த இரு வியாபாரிகளும், கோவை, ஈரோடு ஆகிய நகரங்களுக்கு சென்றுவிட்டு மதுரைக்கு சென்றனர். மதுரையில் வியாபாரத்தை முடித்து கொண்டு சென்னைக்கு வந்த போது ஆம்னி பஸ்சில் நகைகளை பறி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பைக்கு சென்று நடத்திய விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விலாஸ் பீமாராவ்(30), ராமாராவ்(30), சந்து குண்டேபாசுக்குலே(28), சீத்தாராம் டிக்காலே(36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 191 சவரன் கொள்ளை நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள நகைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications