தஞ்சாவூரில் ‘கொடி கட்டி பறக்கும்’ திமுக கோஷ்டி மோதல்- டி.ஆர். பாலு பேனர் கிழிப்பால் பரபரப்பு

மோதலின் பின்னணி?
மத்திய அமைச்சரும் தஞ்சாவூர் மாவட்ட திமுக செயலாளருமான பழனிமாணிக்கத்துக்கும் திமுக எம்.பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவுக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தில் இருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் தமது கோட்டையான தஞ்சாவூர் பக்கம் டி.ஆர். பாலு போட்டியிட்டுவாரோ என்ற அச்சம் பழனிமாணிக்கத்துக்கு உள்ளது. இருவரிடையேயான மோதலை தீர்க்க திமுக தலைமை முயற்சித்தது. ஆனாலும் பகிரங்கமாக பத்திரிகையாளர்ளிடம் டி.ஆர். பாலுவை பழனிமாணிக்கம் விமர்சிக்க மீண்டும் கருணாநிதியே பஞ்சாயத்து செய்ய வேண்டிய நிலைமை வந்தது. பின்னர் என்னால் எந்த பிரச்சனையும் வராது என்று கூறி பழனிமாணிக்கமே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மீண்டும் மோதல்
இந்நிலையில் தஞ்சாவூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இன்று டி.ஆர். பாலு கலந்து கொள்ள இருந்தார். இதற்காக அவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் மர்மமான முறையில் டி.ஆர். பாலுவின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டிருந்ததால் தஞ்சாவூரில் பதற்றம் ஏற்பட்டது. பழனிமாணிக்கம் கோஷ்டியினர்தான் இதனை செய்திருக்க வேண்டும் என்று டி.ஆர். பாலு கோஷ்டியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இருதரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கும் இந்த மோதல் கைகலப்பாக மாறும் முன்பு தடுத்தாக வேண்டும் என்கின்றர் தஞ்சாவூர் ‘அணிசேரா' திமுகவினர்!
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications