தமிழக துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு- நாளை பதவி ஏற்பு

தமிழக பேரவையில் துணை சபாநாயகராக இருந்த பி. தனபால் கடந்த 10-ந் தேதி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட கடைசி நாளான நேற்று வரை பொள்ளாச்சி ஜெயராமனை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்ய வில்லை. இதனால் பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியின்றி ஒரு மனதாக துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் சபாநாயகர் தனபால் வெளியிடுவார். இதைத் தொடர்ந்து துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் பதவி ஏற்றார்.
நாளை கூடுகிறது சட்டசபை
இந்த நிலையில் நாளை தமிழக சட்டசபை காலை 10 மணிக்குக் கூடுகிறது. அப்போது துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பேற்றுக் கொள்கிறார். அதன் பினனர் முதல் துணை நிலை மதிப்பீடுகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதையடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப்படும். சட்டசபை கூட்டம் 4 நாட்கள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதுபற்றி நாளை நடைபெறும் அலுவல் ஆய்வுகுழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications