பசும்பொன்னில் தேவர் குருபூஜை தொடங்கியது
பசும்பொன்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தலைவரின் நினைவிடத்தில் 105வது ஜெயந்தி விழா மற்றும் 50வது குருபூஜை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. 3 நாட்களுக்கு இது நடைபெறும்.
முன்னதாக இதுகுறித்து தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் நேற்று கூறுகையில், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 105-வது ஜயந்தி விழாவும், 50-வது குருபூஜை விழாவும், முப்பெரும் விழாவாக, இன்று தொடங்குகிறது.
முதல் நாள் (ஞாயிற்றுக் கிழமை) ஆன்மிக விழா நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு நினைவிட வளாகத்தில் திருவிளக்கு பூஜை உற்சவம் நடைபெற்ற பின்பு, இரவு 9 மணிக்கு அலங்கார தேரில் தேவர் சிலை பவனி நடைபெறுகிறது.
திங்கள்கிழமை (அக்.29) காலை லட்சார்ச்சனையும், யாக சாலை பூஜையும் நடைபெறுகின்றன. இரவு 10 மணிக்கு நாடகம் நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு 33 அபிஷேகங்களுடன் மகா குருபூஜையை கோவை-காமாட்சிபுரி ஆதீனம், குரு மகா சன்னிதானம் ஞான குரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் மற்றும் குழுவினர் நடத்துகின்றனர் என்றார்.
தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் போலீஸார் விதித்துள்ளனர். அசம்பாவிதங்களையும், கலவரங்களையும் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications