பேரவை வைரவிழா நினைவு வளைவுக்கு ஜெ. அடிக்கல்- 4 தேமுதிக எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு

தேமுதிக எம்.எல்.ஏக்களான சுந்தரராஜன், தமிழழகன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு ஜோடி ஜோடியாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினர். அனைவருமே அதிமுக அரசுக்கு பாராட்டும் தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து கேட்கப் போன பத்திரிகையாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வசைமழை பொழிந்து வறுத்தெடுத்திருந்தார். தேமுதிகவிலிருந்து மொத்தம் 12 எம்.எல்.ஏக்கள் விலகப் போவதாகவும் கூறப்பட்டு வருகிறது
இந்நிலையில் சட்டப்பேரவை வைரவிழாவையொட்டி சென்னை தலைமைச் செயலகத்துக்கும் போர் நினைவு சின்னத்துக்கும் இடையே ‘வைரவிழா நினைவு வளைவு' அமைக்க முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தேமுதிக(ஜெ) அணியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏக்களும் ஆஜராகியிருந்தனர். பேராவூரணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. அருண்பாண்டியன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications