ஆலோசிப்பதிலேயே குழப்பம்... தேமுதிக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை ரத்து செய்தார் விஜயகாந்த்
சென்னை: கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடப்பதாக இருந்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை திடீரென விஜயகாந்த் ரத்து செய்து விட்டார். நேராக அனைவரும் சட்டசபைக்குப் போகுமாறு அவர் கூறியதைத் தொடர்ந்து கூட்டம் ரத்தாகி, எம்.எல்.ஏக்கள் நேரடியாக சட்டசபைக்குச் சென்றனர்.
இன்று தமிழக சட்டசபைக் கூட்டம் தொடங்கியது. அதற்கு முன்னதாக காலை எட்டரை மணியளவில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நான்கு எம்.எல்.ஏக்கள் அணி மாறி விட்டதால் பெரும் பதட்டத்திலும், குழப்பத்திலும் தேமுதிக தரப்பு உள்ளதால் இந்தக் கூட்டம் குறித்து எம்.எல்.ஏக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால் திடீரென எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், நேரடியாக சட்டசபைக்குச் செல்லுமாறும் எம்.எல்.ஏக்களுக்கு தேமுதிக தலைமை உத்தரவிட்டு விட்டதாம். கூட்டம் ரத்தானதற்கு என்ன காரணம் என்று தெரிவிக்கப்படவில்லையாம்.
இருப்பினும் மேலும் 8 எம்.எல்.ஏக்கள் அணி மாறவுள்ளதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் இருப்பதால், இன்றைய கூட்டத்தை விஜயகாந்த் விரும்பவில்லையாம். இதனால்தான் கூட்டம் ரத்தானதாக கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications