தேமுதிக (ஜெ) அணிக்கு ஸ்டாலினுக்குப் பின்னால் 5வது வரிசையில் இடம்!

துணை சபாநாயகர் பொறுப்பேற்பு
தமிழக சட்டசபையின் கூட்டம் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தில் துணை சபாநாயகர் தேர்தலில் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமனைத் தவிர வேறு எவரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வானார். இதனையடுத்து அவர் துணை சபாநாயகராக பதவியேற்றார்.
தேமுதிக(ஜெ) அணிக்கு தனி இடம்
இதனிடையே முதலமைச்சரை சந்தித்துப் பேசி ஆதரவு தெரிவித்த தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன், சுந்தரராஜன், தமிழழகன் ஆகியோர் ஒரே வரிசையில் அமரும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டது. அனைவரும் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு பின்னால் 5-வது வரிசையில் ஒன்றாக ஒரு தனி அணியாக உட்கார வைக்கப்பட்டனர். முன்னர் இவர்கள் அனைவரும் விஜயகாந்த் அமர்ந்திருந்த தேமுதிகவினர் வரிசையில் உட்கார்ந்திருந்தனர்.
நவ. 2 வரை கூட்டம்- கட்சிகள் எதிர்ப்பு
இன்றைய கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற சட்டசபை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் நவம்பர் 2-ந் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், நாளை கூட்டம் நடைபெற்றது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு வார காலம் கூட சட்டசபையை நடத்தாமல் இருப்பது சரியானது அல்ல என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.












Click it and Unblock the Notifications