சச்சின் எம்.பியாக எதிர்ப்பு தெரிவித்த மனு-தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்(39). கிரிக்கெட் போட்டிகளில் இவரது சிறந்த செயல்பாடுகளை பாராட்டும் வகையில், சமீபத்தில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதற்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சச்சினை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து வழக்குகள் தற்போது விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த எம்.எல்.ஏ. ராம்கோபால் சிங் சிசோடியா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது,
கிரிக்கெட் வீரர் ஒருவரை, ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்வு செய்ய அரசியல் சட்டத்தில் எந்த சட்டமும் இல்லை. எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட கலை, அறிவியல், சமூக அறிவியல், இலக்கியம் ஆகிய துறைகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில் கிரிக்கெட் வீரரான சச்சின், எம்.பி.யாக நியமிக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது. எனவே இந்த நியமனத்தை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக டெல்லி மற்றும் அலகாபாத் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அல் தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. எனவே இதை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications