கோகுல இந்திரா கேஸ்... கருணாநிதிக்கு கோர்ட் சம்மன்
சென்னை: தமிழக அமைச்சர் கோகுல இந்திரா தொடர்ந்துள்ள வழக்கில் டிசம்பர் 18ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி திமுக தலைவர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்ப சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில், ஆகஸ்ட் 23ம் தேதி அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கருணாநிதி கேள்வி பதில் பாணி அறிக்கையில் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கருணாநிதி உள்ளிட்டோர் மீது சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குப் போட்டார் அமைச்சர் கோகுல இந்திரா. அதில்,
உண்மைக்கு புறம்பாக அவதூறு செய்தியை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிக்கையின் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர், செய்தியாளர் மற்றும் இந்த செய்தியை மேற்கோள் காட்டி அவதூறாக பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, இவரது கருத்து வெளியிட்ட முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியர் செல்வம் ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கலையரசன், கருணாநிதி உள்ளிட்டோர் டிசம்பர் 18ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications