புயல் சின்னம்: தூத்துக்குடியில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி: புயல் சின்னம் காரணமாக தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 18ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் அதிகமான அளவாக திருச்செந்தூரில் 202 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களில் ஒரளவுக்கு நீர் நிரம்ப துவங்கி உள்ளது. இதனால் பல பகுதிகளிலும விவசாயிகள் விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்.
ஆனால் தொடர் மழை காரணமாக உப்பு உற்பத்தி அடியோடு முடங்கியதுள்ளது. மேலும் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெய்துள்ள மழைக்கு 4 கால்நடைகள் பலியாகியுள்ளன. 15 வீடுகள் முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் வங்ககடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் அதிக மழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலுக்குள் மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications