விமானம் பறக்கும் போது நடுவானில் தூங்கிய விமானிகள்!
லண்டன்: பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதிலிருந்த விமானிகள் இருவர் தூங்கி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட விமானம் எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குப் போய்க் கொண்டிருந்தது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் தலைமை விமானி, கழிப்பறைக்கு செல்வதற்காக, சக விமானிகளிடம் விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
சில நிமிடங்கள் கழித்து அவர், விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு மற்றொரு விமானியிடம் பேச முயன்றார். அவரிடமிருந்தும் பதில் வரவில்லை. மூன்றாவது விமானியை தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.
இதனால் பதற்றமடைந்த தலைமை விமானி, விமானிகள் அறைக்கு சென்று பார்த்த போது, அவர்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதுவரை நடுவானில் விமானம் பறந்து கொண்டே தான் இருந்தது. இதையடுத்து விமானத்தை இயக்கும் பொறுப்பை மீண்டும் எடுத்த கேப்டன், பத்திரமாக உரிய இடத்தில் அதை தரையிறக்கினார். அப்போது கூட 3வது விமானி தூங்கியபடியேதான் இருந்தாராம்.
இவர்களது பெயரை இங்கிலாந்து விமானத்துறை வெளியிட மறுத்து விட்டது. இது குறித்து விமானிகள் சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகையில், விமானம் பறக்கும் போது அசதி காரணமாக விமானிகள் தூங்குவது சகஜம் தான் என்றனர்.
ஏற்கனவே பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானிகள் அடிக்கடி தூங்குவதாக புகார் உள்ளது. விமானிகளின் இந்த பாதுகாப்பற்ற செயல் குறித்து விமான அமைச்சகமும் கவலை தெரிவித்துள்ளது.
22 மணிநேர வேலை காரணமா?
விமானிகளுக்கு 22 மணிநேரம் வேலைப்பளு இருக்கிறது என்பது விமானிகளின் புகாராகும். விமான நிலையத்திற்கு வந்து பணிக்காக ஆயத்தவேலைகளில் ஈடுபடுவதோடு, 11 மணிநேரம் பறக்க வேண்டும் எனவே விமானிகள் ஓய்வெடுக்கும் நேரம் குறைவாகவே இருக்கிறது. எனவே பணிப்பளுவை குறைக்கவேண்டும் என்று விமானிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications