சீரமைப்பு பணிகள் முடிந்த சுதந்திர தேவி சிலை திறப்பு-புயலால் மீண்டும் மூடல்

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில் வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர தேவியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 126வது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த சிலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வகையில், கடந்த ஒரு ஆண்டாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
30 மில்லியன் டாலர் மதிப்பில் சுதந்திர தேவி சிலையில் சீரமைப்புகள் முடிந்து, பார்வையாளர்களுக்காக நேற்று திறந்துவிடப்பட்டது. ஆனால் தூங்காத நகரம் என்ற பெயரை பெற்ற நியூயார்க் நகரை தற்போது சாண்டி புயல் தாக்கியுள்ளது. இதனால் நியூயார்க் நகரம் முடங்கி உள்ளதால், சுதந்திர தேவி சிலைக்கு பார்வையாளர்களின் அமைதி ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மூடப்பட்டது.
இந்த நிலையில் சுதந்திர தேவி சிலை மீண்டும் நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டில் சுதந்திர தேவி சிலையில் பல சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. கால் பகுதியில் இருந்து விளக்கு வரை மொத்தம் 151 அடி உயரம் கொண்ட இந்த சிலை, நட்சத்திர வடிவிலான அடித்தளத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ளது.
சிலையின் உள்பகுதியில் 354 படிகள் அமைக்கப்பட்டு, பார்வையாளர்கள் சிலையின் மீது ஏறி செல்ல முடிந்தது. ஆனால் நடக்க முடியாத நபர்களால் சிலையை கீழிருந்து மட்டுமே பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் தற்போது சிலையின் உள்பகுதியில் இருந்த படிகளின் எண்ணிக்கையை 393 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வீல்சேரில் சிலையின் தலை பகுதி வரை செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிலையின் உட்பகுதியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு, குளியலறை, கழிப்பறை வசதிகள் சீரமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 3.5 மில்லியன் மக்கள் சுதந்திர தேவி சிலையை பார்வையிட வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது செய்யப்பட்ட சீரமைப்பு பணிகளின் மூலம் மேலும் 26 ஆயிரம் பார்வையாளர்கள் அதிகமாக பார்வையிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் மூலம் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட சுதந்திர தேவி சிலை கடந்த 1886ம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த 1924ம் ஆண்டு தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் மூலம் மூடப்பட்ட இந்த சிலை, மீண்டும் கடந்த 2011ம் ஆண்டு பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications