நவம்பர் 1ம் தேதியை துரோக நாளாக அனுசரிக்க வேண்டும்-சந்திரசேகர் ராவ்!
Subscribe to Oneindia Tamil

இது குறித்து ஆந்திர மாநில தெலுங்கு ராஷ்டிர சமிதியின்(டிஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தெலுங்கு பேசும் பகுதிகளை ஒன்றாக இணைத்து மொழிவாரி அடிப்படையில் கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. மொழிவாரிய அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் ஆந்திரா தான்.
ஆந்திர மாநிலத்தில் எல்லா வகையிலும், அனைத்துத் தரப்பிலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதால், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் தேதியை துரோக நாள் என்று எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு ராஷ்டிர சமிதி செயல்பட்டு வருகிறது
ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்ட நாளான நவம்பர் மாதம் 1ம் தேதியை எதிர்ப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications