பரமக்குடி கொலை: தென் மாவட்டங்களில் அமைதிகாக்க வைகோ வேண்டுகோள்
சென்னை: தேவர்ஜெயந்தியை ஒட்டி பசும்பொன் கிராமத்திற்கு சென்றவர்கள் மீது பரமக்குடி அருகே நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூன்றுபேர் உயிரிழந்தனர். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 30 இல் பரமக்குடி வட்டாரத்தில் நடைபெற்ற படுகொலைகள், பேர் இடியாக நெஞ்சில் விழுந்து, தாங்கமுடியாத அதிர்ச்சிக்கு ஆளானேன். சொந்தப் பகையோ, முன்விரோதமோ இல்லாதபோதும், வன்முறை தாக்குதலுக்கு ஆளாகி,கொல்லப்பட்டனர் என்பது மனதைப் பதற வைக்கிறது.
இது ஈவு இரக்கமற்ற கொலைபாதகச்செயலாகும். இத்தகையக் கொடூர வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் கண்டத்தைத் தெரிவிப்பதோடு, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை தமிழக அரசும்,காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில், தாங்கமுடியாத துக்கத்தால் வாடும் மக்கள் ஆத்திர உணர்ச்சிக்குஆளாகி, வன்முறை மோதலுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று ஒரு சகோதரனாக வேண்டுகிறேன். மோதல் நேர்ந்தால், கலவரம் ஏற்பட்டால், சின்னஞ்சிறு பிள்ளைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், அமைதியாக வாழ விரும்புகிற மக்கள் அனைவருமே ஆபத்துக்கு ஆளாவார்கள். எனவே தெற்கு சீமைக்கு இந்த அபாயம் நேராமல் தடுக்க, அமைதி காக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications