சல்மான் குர்ஷ்த் தொகுதியில் அர்விந்த் கெஜ்ரிவால் குழுவினர் மீது தாக்குதல்
ஃபரூக்காபாத்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளை மோசடி தொடர்பாக அவரது சொந்தத் தொகுதியான ஃபரூக்காபாத்தில் பிரச்சாரம் செய்த அர்விந்த் கெஜ்ரிவால் குழு மீது காங்கிரசாத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குர்ஷித்- கெஜ்ரிவால் மோதல்
சல்மான் குர்ஷித்தும் அவரது மனைவியும் மாற்றுத் திறனாளிகளுக்கு அறக்கட்டளை நடத்துவதாகக் கூறி மோசடியான ஆவணங்கள் மூலம் மத்திய அரசிடம் நிதி உதவி பெற்றனர் என்பது கெஜ்ரிவால் குழுவின் புகார். இப்புகாரை முன்வைத்து டெல்லியில் போராட்டம் நடத்திய கெஜ்ரிவால், குர்ஷித் பதவி விலகும் வரை அல்லது பதவி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தார். மேலும் சல்மான் குர்ஷித்தின் தொகுதியான ஃபரூக்காபாத்தில் அவருக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் கெஜ்ரிவால் கூறியிருந்தார். ஆனால் தமது தொகுதிக்குள் நுழைந்துவிட்டு உயிரோடு திரும்பிப் போய்விடுவாரா கெஜ்ரிவால்? என்று எச்சரித்திருந்தார் குர்ஷித்.
ஃபரூக்காபாத்தில் கெஜ்ரிவால்- காங்கிரசார் கலாட்டா
இந்நிலையில் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சல்மான் குர்ஷித்துக்கு பதவி உயர்வாக வெளியுறவுத் துறை அமைச்சரானார். கெஜ்ரிவாலும் விடுவதாக இல்லை. இன்று ஃபரூக்காபாத்துக்கு தமது ஆதரவாளர்களுடன் சென்று குர்ஷித்துக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார். கெஜ்ரிவாலின் பிரச்சாரத்துக் கூட்டத்தை முற்றுகையிட்ட காங்கிரசார் அங்கு மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. கெஜ்ரிவால் கூட்டத்துக்கு ஆட்களை ஏற்றி வந்த வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் கெஜ்ரிவால் கூட்டத்தைக் கண்டித்து கறுப்புக் கொடிகள் ஏந்தி ஆர்ப்பாட்டங்களையும் காங்கிரசார் நடத்தியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications