ஒரு பொம்பளையும் மோடிக்கு ஓட்டுப் போடக் கூடாது... சுனந்தா ஆவேசம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரக்சாரக் கூட்டத்தில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சசிதரூரின் மனைவி சுனந்தாவை 50 கோடி ரூபாய் கேர்ள்ப்ரண்ட் என்று வர்ணித்தார். இதனால் டிவிட்டரில் சசிதரூர் காட்டமாக பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் மோடியின் கருத்துக்கு பதிலளித்த சுனந்தா, குஜராத் முதல்வர் மோடி கூறிய கருத்துக்கு அவரிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் 2002 ஆம் நடந்த வகுப்பு கலவரத்திற்கே அவர் இன்னும் மன்னிப்பு தெரிவிக்கவில்லை என்றார்.
குஜராத் மாநிலம் மகாத்மா காந்தி, சர்தார் வல்பாய் படேல் போன்றவர்களை தந்துள்ளது. அந்த மாநிலத்தில் பிறந்த ஒருவர் பெண்ணுக்க மதிப்பளிக்காமல் பேசியுள்ளார். அரசியலில் இன்றைக்கு சோனியா காந்தி, மீராகுமார் போன்ற சாதனை படைத்த பெண்மணிகள் இருக்கின்றனர். அப்படி இருக்கையில் ஒரு மத்திய அமைச்சர் ஒருவரின் மனைவியை 50 கோடி கேர்ள் ப்ரண்ட் என்று மோடி வர்ணித்திருப்பது சரியான செயல் அல்ல.
மீதி 20 கோடி எங்கே?
அது என்ன 50 கோடி ரூபாய் கணக்கு என்னுடைய வருமானத்திற்கு முறையாக நான் வரி செலுத்துகிறேன். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. ஐபிஎல் ஒப்பந்தம் தொடர்பாக முதலில் 70 கோடிரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று மீது குற்றம் சாட்டினார்கள். இப்போது 50 கோடி ரூபாய் என்கின்றனர். மீதி 20 கோடி ரூபாய் எங்கே போயிற்று பி.ஜே.பியினர் எடுத்துக்கொண்டனரா என்று சுனந்தா கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களை மதிக்காத மோடிக்கு குஜராத் பெண்கள் யாரும் ஓட்டளிக்கவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காதல் விவகாரத்துறை அமைச்சர்
ஆனால் பாஜகவினரும் விடுவதாக இல்லை. தொடர்ந்து சசிதரூரை கிண்டல் செய்து வருகின்றனர். காதல் விவகாரங்களில் கை தேர்ந்த தரூருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பதிலாக ‘காதல் விவகாரத் துறை' என்ற துறையை உருவாக்கி அதில் அமைச்சராக்கலாம் என்று கூறியுள்ளனர். மோடியை காதலிக்கச் சொல்லி சசி தரூர் டிவிட்டரில் செய்தி வெளியிட்டதற்கு பதிலடியாக பாஜகவினர் தரூரின் காதல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
சசிதரூர் ஏற்கனவே, திலோத்தமா, கிறிஸ்டினா என்ற இரண்டுபேரை மணந்து விவாகரத்து செய்தவர். மூன்றாவதாகத்தான் சுனந்தாவை காதலித்து திருமணம் செய்தார். என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications