ஒண்டிக்கு ஒண்டி... உதயகுமாருக்கு சரத்குமார் சவால்

Subscribe to Oneindia Tamil

Sarathkumar and Udayakumar
நெல்லை: கூடங்குளம் விவகாரம் தொடர்பாக ஒரே மேடையில் உதயகுமாருடன் விவாதம் நடத்த தயார் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக திறக்க கோரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் அக்கட்சி சார்பில் பாளையில் உண்ணாவிரதம் நடந்தது.

உண்ணாவிரதத்தை முடித்து வைத்து சரத்குமார் பேசியதாவது, தமிழகமே மின்வெட்டில் தவிக்கும் நிலையில் கூடங்குளம் அணு மின் உற்பத்தியை அனைவருமே எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அணு உலை போராட்ட குழுவினரும் சில அரசியல் கட்சியின் தலைவர்களும் மக்களை திசை திருப்பி வருகின்றனர்.

மற்ற பொருட்களை போல் மி்ன்சாரத்தை தேக்கி வைக்கவோ, பதுக்கி வைக்கவோ முடியாது. மின்சாரத்தின் தேவை அறிந்து உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே மின் பற்றாக்குறை தீரும்.

இன்று 3500 முதல் 4000 மெகா வாட் மின் பற்றாக்குறை இருக்கிறது என்றால் தொலை நோக்கு திட்டங்கள் இல்லாதது தான்காரணம். கூடங்குளம் உள்ளிட்ட நல்ல திட்டங்களையும் சிலர் தடுக்கின்றனர்.

எந்த ஒரு போராட்டத்திலும் பொது நலம்இருக்க வேண்டும். சுயநலம் கலந்த போராட்டங்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளே எடுத்து சொன்ன பிறகும் கூட உதயகுமார் அதை ஏற்று கொள்ள மறுக்கிறார். போராட்ட குழு தலைவர், அப்துல் கலாமை விட தன்னை பெரிய விஞ்ஞானியாக கருதி கொள்கிறார்.

கூடங்குளத்தில் இன்று கோடிக்கணக்கில் முதலீடு செய்து திட்டம் செயலபாட்டுக்கு வரும் நிலையில் போராட்டக் குழுவினர் எதிர்ப்பதன் நோக்கம் என்ன. முதல் மாதத்திலேயே கருக்கலைப்பு செய்யாமல் 10வது மாதம் கருககலைப்பு செய்தால் அதற்கு பெயர் கொலை என்றே கூற வேண்டும். அதைத்தான் போராட்டக்குழு செய்கிறது.

சரத்குமார் இயற்பியல் படி்த்துள்ளாரா, வேதியியல் படித்துள்ளாரா, எங்களோடு விவாதிக்க தயாரா என்றெல்லாம் உதயகுமார் கேள்வி எழுப்பி வருகிறார். கூடங்குளம் விவகாரம் தொடர்பாக ஒரே பொது மேடையில் உதயகுமாருடன் விவாதிக்க நான் தயார்.

ஒரு தலைவன் என்றால் மக்களை முன்னின்று நடத்த வேண்டும். பெண்கள் பின்னாலும், குழந்தைகள் பின்னாலும் ஒளிந்துகொள்ள கூடாது. கூடங்குளம் அணு உலையை திறந்து மின் தேவையை பூர்த்தி செய்ய நாம் போராடுவோம் என்றார் சரத்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+