விமான நிலைய தகராறு வழக்கு: ஜெயிலுக்குப் போகாமல் தப்பினார் விஜயகாந்த்- முன்ஜாமீன் கிடைத்தது!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் பாலுவைத் தாக்கிய வழக்கில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

தேமுதிகவின் சுந்தரராஜன், தமிழழகன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகிய எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக அரசுக்கு ஆதரவைத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னை விமான நிலைய த்தில் செய்தியாளர்கள், விஜயகாந்திடம் கருத்துக் கேட்க முயன்றனர். அப்போது பத்திரிகையாளர்களை மிகக் கேவலமாக விமர்சித்தார். நாயே என ஒருமையிலும் பேசினார். தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசனால் பத்திரிகையாளர் பாலு தாக்கப்பட்டார். இது தொடர்பாக சென்னை விமான நிலைய காவல்நிலையத்திலும் சென்னை மாநகர காவல்துறையிடமும் புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமக்கு முன் ஜாமீன் கோரியிருந்தார் விஜயகாந்த்.
தேமுதிக எம்.எல்.ஏ கைது
இதனிடையே நிருபரைத் தாக்கிய வழக்கில் தேமுதிக எம்.எல்.ஏ. முருகேசன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விஜயகாந்த் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் விஜயகாந்துக்கு முன்ஜாமீன் கொடுக்கப்பட்டது. விசாரணையின் போது ஆஜராக வேண்டும் என்றும்
அனைவரையும் அடிப்பவர் விஜயகாந்த்
இன்றைய விஜயகாந்த் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜயகாந்தைப் பொறுத்தவரையில் அவர் அனைவரையும் அடிப்பதையே வழக்கமாகக் கொண்டவர். அதனால் அவருக்கு முன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று வாதாடினார். மேலும் தமது கட்சி வேட்பாளரையே பொது இடத்தில் அடித்தவர் விஜயகாந்த் என்றும் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாதவர் என்றும் அரசுத் தரப்பில் கடுமையாக வாதிட்டடது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications