82 வயது தாயை கட்டிலோடு பஸ் ஸ்டாப்பில் போட்டு விட்டுப் போன மகன்
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே 82 வயதான தங்களது தாயை பராமரிக்க முடியாத மகன் கட்டிலோடு தூக்கி வந்து பஸ் ஸ்டாப்பில் போட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் கண்டிகா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரங்கையா என்பவரின் மனைவி சுப்பம்மா. 82 வயதான இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். கணவர் மறைவுக்குப் பின்னர் மூதாட்டி சுப்பம்மா தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். ஆனால் அவரது மகள் தன்னால் அம்மாவைப் பார்க்க முடியவில்லை என்று கூறி, தனது அண்ணன் முனிரத்தினம் நாயுடு வீட்டில் கொண்டு போய் விட்டார்.
ஆநால் முனிரத்தினமோ, தனது தம்பி நாதமுனி நாயுடு வீட்டுக்குக் கொண்டு போய் தாயை விட்டார். ஆனால் நாதமுனிக்கும் தனது தாயைப் பார்க்க விருப்பமில்லை. இதையடுத்து கட்டிலில் படுத்திருந்த தனது தாயை, அப்படியே கட்டிலோடு தூக்கி வந்து திருப்பதி பைபாஸ் சாலையில் பஸ் ஸ்டாப்பில் வைத்து விட்டு அவர் பாட்டுக்குப் போய் விட்டார்.
இப்படி நடு ரோட்டில், கடும் குளிரிலும், மழையிலும் கடந்த 15 நாட்களாக வாடிப் போய் நடுங்கிக் கிடந்தார் சுப்பம்மா. அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்ட டீக்கடைக்காரர் ஒருவர் அவருக்கு சாப்பாடு போட்டார். மேலும் இந்த செய்தி திருப்பதிக்குப் பரவியது.
இதையடுத்து எஸ்.பி. பிரபாகர் ராவ் அந்த பரிதாபத்துக்குரிய பாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தார். ஆனால் பாட்டி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மகன் வீட்டுக்கே என்னை அனுப்பி வையுங்கள், நான் அங்குதான் போவேன் என்று கூறினார்.
இதையடுத்து நீங்கள் முதலில் காப்பகத்துக்குப் போங்கள், உங்களது மகன்களிடம் பேசி விட்டு அனுப்பி வைக்கிறோம் என்று சமாதானப்படுத்தி காப்பகத்திற்கு மூதாட்டியை அனுப்பி வைத்தனர் போலீஸார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications