பால் தாக்கரே உடல்நிலை கவலைக்கிடம்: அவசர கூட்டத்தை கூட்டியது சிவசேனா
மும்பை: சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேயின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், அவரது மகன் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் அவசர கூட்டத்தை கூட்டினார்.
கடந்த 1966ம் ஆண்டு சிவசேனா கட்சியை தோற்றுவித்தவர் பால் தாக்கரே. தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நாடாளுமன்ற கூட்ட தொடர் துவங்கும் முன்னர், சிவசேனா எம்.பிக்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் தற்போது பால் தாக்கரேயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவரது மகனும், கட்சியின் நிர்வாக தலைவருமான உத்தவ் தாக்கரே, கட்சி செயற்குழுவின் அவசர கூட்டத்தை கூட்டினார்.
கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு வெளியே வந்த உத்தவ் தாக்கரே கூறியதாவது,
இந்த செயற்குழு கூட்டம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. இது ஒரு அவசர கூட்டம் அல்ல. இதில் எனது தந்தையின் உடல்நிலை குறித்து எதுவும் விவாதிக்கவில்லை. சிவசேனா தலைவரின் உடல்நிலையை கண்டு அனைவரும் வருத்தம் அடைந்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
தற்போது 86 வயதான பால் தாக்கரே, கடந்த வாரம் நடைபெற்ற தசரா விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது கட்சி தொண்டர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, உடல் ரீதியாக நான் தளர்ந்துவிட்டேன். என்னால் நடக்க கூட முடியவில்லை. நான் மிகவும் பலவீனமாகிவிட்டேன். எனவே எனது காலத்திற்கு பிறகு உங்களின் ஆதரவை, எனது மகன் உத்தவ் மற்றும் பேரன் ஆதித்யா ஆகியோருக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.
பால் தாக்கரேவின் உறவினரான ராஜ் தாக்கரே சில ஆண்டுகளுக்கு முன் கட்சியை உடைத்து தனியே மகாராஷ்டிர நவநிர்மான சேனா என்ற கட்சியை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சிவசேனா பலவீனமடைந்துள்ள நிலையில் தனது மகனுக்கு ஆதரவு தருமாறு கோரியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications