வரும் 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

பயமுறுத்திக் கொண்டிருந்த நிலம் புயல் பெரிய ஆபத்தை ஏற்படுத்தாமல் போய் விட்டது. இருந்தாலும் புயல் ஆந்திரக் கரையோரம் நிலை கொண்டிருந்ததால், தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை மையம் கூறியிருந்தது.
இருப்பினும் தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் பெரிய அளவில் நேற்று மழை இல்லை. அதேசமயம், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் கடும் குளிர் நிலவியது.
இந்த நிலையில், நிலம் புயல் தற்போது காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்து விட்டதாகவும், இதன் காரணமாக, வட கிழக்கு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில், தமிழகத்தை நோக்கி வந்த நிலம் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து,
மேற்கு மற்றும் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா மாநிலம் ராயல்சீமா - அனந்தபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலைகொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உள்ள ஈரமான காற்றை ஈர்த்து வருகிறது. இதன் காரணமாக, வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக் கூடும். சென்னை உள்ளிட்ட ஒருசில நகரங்களிலும் மழை பெய்யும்.
காற்றழுத்த தாழ்வு நிலையானது படிப்படியாக குறைந்து மறைந்துவிடும் என்று கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications