ஈழத் தமிழர் அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு: ஐ.நாவிடம் திமுக சார்பில் ஸ்டாலின் மனு

சென்னையில் நடைபெற்ற ‘டெசோ' மாநாட்டின் தீர்மானங்களையும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் வழங்கப்பட உள்ள மனுவினையும், கருணாநிதி சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் அமெரிக்க நேரப்படி பகல் 11.15 மணியளவில் ஐ.நா. மன்றத்தின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம் வழங்கினர்.டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்குவதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஸ்டாலினுக்கு நியூயார்க்கில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திமுக போராட்டம்
இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.கழகமும், தலைவர் கருணாநிதியும் 1958-ம் ஆண்டு முதல் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளதாக கூறியதாக ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம், தெரிவித்ததாக மு.க. ஸ்டாலின் கூறினார். மேலும் ‘‘இலங்கையில் நடைபெற்ற போரினால் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும், நிம்மதியான வாழ்க்கை அமைய மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும், கெளரவமான வாழ்க்கை அமைய வேண்டுமென்ற ‘டெசோ' மாநாட்டின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அப்போது ஐ.நா. மன்றத்தின் துணை பொதுச்செயலாளர் யான் லியாசன், ‘‘அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இயற்கை சீற்றத்திற்கு இடையில் மிகவும் சிரமப்பட்டு என்னைச் சந்திக்க வந்திருக்கின்ற இந்த நிகழ்ச்சி ஒன்றிலிருந்தே இலங்கை தமிழர் பிரச்சினையில் உங்கள் தலைவரும், நீங்களும் எந்த அளவிற்கு மனித நேயத்தில் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன்'' என்று கூறியதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மனித உரிமை மீறல்
மனித உரிமை மீறல் என்பது இலங்கையில் நடைபெற்ற பிரச்சினை என்று கருதாமல் உலக நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று எடுத்துக் கொண்டு ஐ.நா. மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஆலோசகர் விஜய நம்பியார் ஆகியோர் உடன் இருந்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications