பார்லி. முற்றுகைப் போராட்டம் நடத்தப் போகிறார் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அரசின் சர்க்கரை கொள்கையில் மாற்றம் கொண்டுவர எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகளுடன் இணைந்து நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்த இருக்கிறார் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்.
டிசம்பர் 4-ந் தேதியன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக ராஷ்டிரிய கிஷான் மஸ்தூர் சங்கம் அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்தில் வி.கே.சிங் இணைந்து கொள்கிறார்.
அண்மையில் மத்திய அரசிடம் தாக்கல் செய்த ரங்கராஜன் குழு, நாட்டின் சர்க்கரை கொள்கையில் முக்கிய மாற்றங்களை நடைமுறைப்படுத்த பரிந்துரைத்திருந்தது. இது கரும்பு விவசாயிகளைப் பாதிக்கக் கூடியது என்பதால் போராட்டம் நடத்தப் போவதாக கிஷான் மஸ்தூர் சங்கம் அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications