அடுத்த மத்திய ஆட்சி மாநில கட்சிகளின் கையில்..மமதாவை சந்தித்த பிறகு வைகோ பேச்சு!

கொல்கத்தாவுக்கு நேற்று சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அங்கு முதல்வர் மமதாவை சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 24 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தபோது, வைகோ ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளை புத்தகங்களாக வெளியிடும் நிகழ்ச்சி அடுத்த ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி டெல்லியில், கான்ஸ்டிட்டியூசன் கிளப் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களையும் அழைத்து வருகிறார் வைகோ. அந்த அடிப்படையில் மமதாவையும் சந்தித்து நேரில் அழைத்தார். வைகோவின் அழைப்பை மமதாவும் ஏற்றார்.
இந்த சந்திப்பின்போது, சிங்கூர் நிலப் பிரச்சினைக்காக, கொல்கத்தாவில் தாம் காலவரையரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, சென்னையில் இருந்து வந்து வைகோ தனக்கு ஆதரவு தெரிவித்ததை நினைவு கூர்ந்த மமதா, அடுத்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் நேதாஜி பிறந்த நாள்விழாவில், கலந்துகொள்ள வேண்டும் என்று வைகோவுக்கு அழைப்பு விடுத்தார். அதை வைகோ ஏற்றார்.
மமதாவுடனான சந்திப்பின்போது வைகோ கூறுகையில், மத்திய அரசில் குவிக்கப்பட்டு உள்ள அதிகாரங்கள் பலவற்றை, மாநிலங்களுக்கு வழங்கவும், மத்திய அரசினுடைய எதேச்சதிரகாரப் போக்கை மாற்றவும், உறுதிகொண்டு போராடுவதற்காக வாழ்த்து தெரிவித்தார்.
கொல்கத்தாவில் உள்ள சாதாரண மக்கள், டாக்சி டிரைவர் முதல், பெட்டிக்கடைக்காரர் வரை மம்தா பானர்ஜி மீது எல்லையற்ற அன்பும் மதிப்பும் கொண்டு இருப்பதை அவர்கள் வாய்மொழியாக தான் அறிந்ததையும் அவரிடம் குறிப்பிட்டார் வைகோ.
மமதாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், மத்திய காங்கிரஸ் அரசின் ஊழல் குறித்தும், ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு செய்த துரோகத்தையும், ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் 2010 இல் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதையும், 2011 இல் அமெரிக்க அரசு சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி கொண்டுவந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததையும், தற்போதும் இலங்கை இராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் செயல்படுவதைப் பற்றியும் விளக்கினார்.
மேலும் அவர் கூறுகையில், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளே இந்திய அரசைத் தீர்மானிக்கும் என்றார் வைகோ. வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மேற்கு வங்க அமைச்சர் ஆருக் பிஸ்வாஸும் உடன் இருந்தார்.
-
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications