சென்னையில் தரைதட்டிய கப்பலைக் காண குவியும் மக்கள்: நொச்சிகுப்பத்தில் போக்குவரத்து நெரிசல்
சென்னை: சென்னையில் தரைதட்டிய சரக்கு கப்பலான பிரதிபா காவிரியைக் காண மக்கள் கூட்டம், கூட்டமாக கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சென்னையை நிலம் புயல் உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தபோது எரிபொருள் இல்லாமல் தவித்த பிரதிபா காவிரி என்ற சரக்குக் கப்பல் அலையால் இழுத்து வரப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து மாயமான 5 பேரில் 4 பேரின் உடல்கள் நேற்று கிடைத்தன. அதில் ஒரு உடல் அரக்கோணத்தைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவருடையது என்று அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் மீஞ்சூர் கடற்பரப்பில் இன்று காலை ஒரு உடல் கரை ஒதுங்கியது. காணாமல் போன ஜோசப் என்பவரது உடலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தரை தட்டிய கப்பலில் இருந்து உயிர் தப்பிக்க குதித்த 5 பேருமே பலியாகிவிட்டனர்.
இதற்கிடையே தரை தட்டிய கப்பலைக் காண பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கப்பலின் முன்பு நின்று உற்சாகமாக புகைப்படம் எடுத்து வருகின்றனர். பொது மக்கள் கடற்கரைக்கு படையெடுப்பதால் நொச்சிக்குப்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications