நள்ளிரவில் திடீர் திடீர்... இடியுடன் சென்னையை பயமுறுத்திய மழை!
சென்னை: சனிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் சென்னையில் பலத்த இடியுடன் கன மழை பெய்ததால் மக்கள் பீதியடைந்தனர். இருப்பினும் இந்த திடீர் மழைக்கு வெப்பச் சலனமே காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களையும், கடலோர மாவட்டங்களையும் சமீபத்தில்தான் நிலம் புயல் பயமுறுத்தி விட்டுப் போயிருந்தது. பெரிய அளவில் சேதம் இல்லாமல் இந்த புயல் கரையைக் கடந்து போய் விட்டதால், மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
கடந்த சில நாட்களாக அவ்வளவாக மழை இல்லாமல் இருந்த நிலையில், நேற்று கடலோர மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழை பெய்தது. தலைநகர் சென்னையில், பகலில் நகர்ப் பகுதியில் நல்ல மழை பெய்தது. அதேசமயம் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவுக்கு மேல் பலத்த இடியுடன் திடீரென கன மழை பெய்ததால், மக்கள் பீதியடைந்தனர்.
இந்த மழைக்குக் காரணம் வெப்பச் சலனம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருந்தது. வங்கக் கடலிலும், அடுத்து அரபிக் கடலிலும் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது.
இதனால் ஏரிகள், குளங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென்கிழக்கு வங்கக்கடலில் வலுவடைய தொடங்கி புயலாக மாறி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழை வரும் 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications