கசாப்புக்கு காய்ச்சல்... டெங்குவா?

மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு சிக்கிய தீவிரவாதி கசாப், மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு கோரி குடியரசுத் தலைவருக்கு அவன் கருணை மனு அனுப்பி வைத்துள்ளான்.
இந்த நிலையில் சிறையில் உள்ள கசாப்புக்கு காய்சச்ல் வந்துள்ளது. தொடர்ந்து காய்ச்சல் இருந்து வருவதால் அவனுக்கு சிறையிலேயே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவனுக்கு காய்ச்சல் அடித்து வருகிறது. அவனுக்கு டெங்கு இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்தது. இதையடுத்து 3 சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் டெங்கு அறிகுறி எதுவும் தென்படவில்லை.
இருப்பினும் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை என்பதால் தொடர்ந்து அவனை தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளோம். அவனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனும் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறான் என்றார்.












Click it and Unblock the Notifications