ஆந்திராவை புரட்டிப் போட்டிருக்கும் நிலம் புயல்- 25 பேர் பலி! 150 கிராமங்கள் மூழ்கின!
ஹைதராபாத்: தமிழகத்தை மிரட்டிவிட்டு ஆந்திராவுக்குப் போன நிலம் புயல் கோரத்தாண்டவமாடியிருக்கிறது. இதுவரை இப்புயல் 25 பேரை பலி கொண்டிருக்கிறது. 150 கிராமங்களை வெள்ள நீரில் மூழ்கடித்திருக்கிறது. சுமார் 1 லட்சம் பேரை இடம்பெயர வைத்திருக்கிறது,
அந்தமான் தீவுகள் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலம் புயலாக உருவெடுத்தது. இப்புயல் தமிழகத்தில் சென்னைக்கு அருகே மகாபலிபுரத்தில் கரையைக் கடந்து திரு வண்ணாமலை, வேலூர் வழியாக ஆந்திரா கடற்பரப்பில் நிலை கொண்டது.
இதனால் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கடலோர மாவட்டங்களில் காற்று மழையும் வெளுத்து வாங்கியது. விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் 150 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 2.5 லட்சம் விளைநிலம் நீரில் மூழ்கியுள்ளது. சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.
விசாகப்பட்டினத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியோரை கடற்படை ஹெலிகாப்டர்கள் மீட்டிருக்கின்றன. கடற்படை ஹெலிகாப்டர் மூலம் இம்மாவட்ட்டத்தில் 70 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்கு கோதாவரி மாவட்டம் நரசபூரில் 31 செ.மீ, அமலாபுரத்தில் 27 செ.மீ, ராஜமுந்தரியில் 25 செ.மீ மழை பொழிந்துள்ளது. நிலம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications