ஹிமாச்சலில் 75% வாக்குகள் பதிவு - ரெக்கை கட்டி பறக்கும் ஆரூடங்கள்!

Subscribe to Oneindia Tamil

Himachal assmebly election
சிம்லா: ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கான தேர்தலில் 75% வாக்குகள் நேற்று பதிவாகி உள்ளன. வாக்குகள் எண்ணிக்கை டிசம்பர் 20-ந் தேதி நடைபெற உள்ளது. அதிகமான வாக்குப் பதிவால் வெல்லப் போவது யார் என்பது பற்றிய ஆரூடங்கள் அனைத்துக் கட்சித் தரப்பிலும் கிளம்பியிருக்கின்றன.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 46.08 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 68 தொகுதிகளில் 459 வேட்பாளர்கள் களத்தில் இத்தேர்தலில் போட்டியிட்டனர். 7,523 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிoருந்தன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. சிராம்பூர் மாவட்டத்தில் 81.48%, சோல்ன் மாவட்டத்தில் 80.34%, சம்பா மாவட்டத்தில் 75% வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குகள் அடுத்த மாதம் 20-ந் தேதி எண்ணப்படுகின்றன.

இத்தேர்தலில் 9 ஆயிரம் துணை ராணுவப் படையினரும், 14 19ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர். ஊர்க்காவல் படையினர் உள்பட 35 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

அதிக வாக்குப் பதிவால் பாஜக கவலை

எதிர்பார்த்த அளவைவிட கூடுதலாக வாக்குகள் பதிவாகி இருப்பதால் வெல்லப் போவது? யார் என்ற விவாதம் அனல் பறக்கிறது. 1990-ம் ஆண்டு முதல் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றன. இம்முறை இந்தக் கட்சிகளை கவலைப்பட வைக்கும் வகையில் பகுஜன் சமாஜ் மற்றும் பிராந்திய கட்சிகளும் களம் இறங்கின.

கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 71% வாக்குகள் பதிவாகின. பாஜகவுக்கு 43.7%, காங்கிரஸுக்கு 38.9% வாக்குகள் கிடைத்தன. தற்போது 75% வாக்குகள் பதிவாகி இருப்பதால் கூடுதல் வாக்குகள் எந்தக் கட்சிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. காங்கிரஸ் தரப்போ தங்களுக்கே கூடுதல் வாக்குப் பதிவு சாதகமாக இருக்கிறது என்கிறது,

ஆனால் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான வெறுப்பில்தான் மக்கள் அதிகளவு வாக்குகளைக் கொட்டியிருக்கின்றனர் என்று பாஜக தரப்பு சொல்கிறது. இரண்டு கட்சிகள் மீதும் இருக்கின்ற வெறுப்பில்தான் கூடுதல் வாக்குகள் பதிவானதாக இதர கட்சிகள் கூறுகின்றன.

இதனால் ஹிமாச்சலப் பிரதேச அரசியல் களம் வாக்குப் பதிவுக்குப் பிறகும் விவாதங்களால் தகித்துக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+