விவேகானந்தரையும் தாவூத்தையும் ஒப்பிடுவதா? கட்காரியையும் கசாப்பையும் ஒப்பிட்டா என்ன?: காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

Nitin Gadkari
டெல்லி: சுவாமி விவேகானந்தரையும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டு பாஜக தலைவர் நிதின் கட்காரி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நிதின் கட்காரியையும் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்பையும் ஏன் ஒப்பிட்டு பேசக் கூடாது என்கிறது காங்கிரஸ்

சர்ச்சை என்ன?

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்காரி, சுவாமி விவேகானந்தருக்கும் தாவூத் இப்ராகிமுக்கும் iq (அறிவு) என்பது ஒரே மாதிரியானதுதான். ஆனால் அவர்கள் அதை பயன்படுத்திய விவதம் வெவ்வேறானது. ஒருவர் சமூக மேம்பாட்டுக்காக அந்த அறிவை பயன்படுத்தினார். மற்றொருவரோ சமூகத்தை சீர்குலைக்கவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாதத்தை பரவுப்புவதற்கும் பயன்படுத்தினார் என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் பதிலடி

நிதின் கட்காரியின் இப்பேச்சு பலத்த சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறது. சுவாமி விவேகானந்தர் பெயரில் அண்மையில் யாத்திரையெல்லாம் நடத்திய மோடியையும் அவரது ஆதரவாளர்களையும் இந்த விவகாரத்தில் பதில் சொல்லுமாறு ட்விட்டரில் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங். இதேபோல் நாடு போற்றும் ஆன்மீக தலைவரை குற்றவாளி ஒருவருடன் அதெப்படி பேசலாம் என்று காங்கிரஸின் மணிஷ் திவாரி விமர்சித்திருக்கிறார்.

கட்காரியும் கசாப்பும்

காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவரான ஜகதாம்பிகா பாலோ இன்னும் ஒருபடி மேலேபோய் காட்டமாக, "கட்காரியையும் கசாப்பையும் ஒப்பிட்டுப் பேசினா பாஜக என்ன பதில் சொல்லும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கட்காரி பல்டி

இதனிடையே தாம் விவேகானந்தரையும் தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டுப் பேசவில்லை என்றும் சிலர் நல்ல செயல்களுக்காக தங்களது அறிவை பயன்படுத்துகின்றனர்.. சிலர் தவறான நடத்தைகளுக்காக பயன்படுத்துகின்றனர் என்பதற்காக சுட்டிக்காட்டிப் பேசினேன் என்று கட்காரி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+