'அண்ணாத்தே உச்சா போய்ட்டாரு'... விசிலடிச்சு, டிரம்ஸ் அடிச்சு விரட்டும் கிராமங்கள்!

இந்த கிராமத்தில் ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதாவது பொது இடங்களில் பட்டப் பகலில் பப்பரப்பா என்று ஆண்கள் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க நூதன முடிவை எடுத்தனர். இதற்காக தன்னார்வ தொண்டர் படையை உருவாக்கியுள்ளனர். அவர்கள் கையில் விசில் மற்றும் டிரம்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. யாராவது பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதைப் பார்த்தால் இவர்கள் உடனே சம்பந்தப்பட்ட நபரிடம் போய் வாயில் விசிலை வைத்து ஊதியும், சுற்றி நின்று டிரம்ஸ் அடித்தும் அந்த நபருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவார்கள்.
இப்படி விசில் ஊதுவதற்குக் காரணம், ஊரே ஒன்று கூடி வேடிக்கை பார்க்கும்போது சிறுநீர் கழித்த நபருக்கு அடுத்தமுறை இப்படி பப்ளிக்காக மூச்சா போகும் எண்ணமே வராமல் திருந்து விடுவார் என்பதால்தானாம்.
அது மட்டுமல்லாமல், ஊரின் மையத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம் மூச்சா போனவரின் பெயர் விவரம் உள்ளிட்டவற்றையும் சொல்லி, இன்னார் இந்த இடத்தில் இந்த மாதிரி மூச்சா போனார் என்றும் சொல்லி மானத்தைக் கப்பலேற்றி விடுவார்களாம்... அதாவது நம்ம ஊரில் கல்யாணத்துக்குப் போய் மொய் எழுதினால் பேரைச் சொல்வார்களே அது போல...
இந்த வித்தியாசத் திட்டத்தை மாவட்டத்தில் உள்ள 34 கிராமப் பஞ்சாயத்துக்களில் அமல்படுத்தவுள்ளனராம்.
சமீபத்தில்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் டாய்லெட் இல்லாத வீட்டில் கல்யாணம் கட்டிக்கிட்டு போகாதீங்க என்ற பிரசாரத்தை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தொடங்கினார் என்பது நினைவிருக்கலாம். இப்போது 34 கிராமங்களில் மூச்சா போவதற்கு எதிராக அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications