கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எந்தெந்த துறைகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது?: சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எந்தெந்த துறைகளிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அணுமின் நிலைய வழக்கு
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு செவ்வாய்கிழமையன்று நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது,மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘‘1989-ம் ஆண்டு காலாவதியான அனுமதியை வைத்து 2001-ல் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதற்கு 2004-ம் ஆண்டு தான் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறப்படவில்லை'' என்று தெரிவித்தார்.
எந்தெந்த துறைகள்
அதற்கு பதில் அளித்த மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் பராசரன், ‘‘கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனைத்து துறைகளின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2-வது யூனிட்டுகள் செயல்பட கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எந்தெந்த துறைகளிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கில் இன்றும் விசாரணை நடக்க இருக்கிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications