கோவில்பட்டி பள்ளி கூரை பெயர்ந்து விழுந்து எல்.கே.ஜி. மாணவன் விரல் துண்டிப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் மேல்கூரை தளம் பெயர்ந்து விழுந்ததில் 9 எல்.கே.ஜி. மாணவர்கள் காயம் அடைந்தனர். அதிலும் ஒரு மாணவனின் பெருவிரல் துண்டானது.
கோவில்பட்டி வக்கீல் தெருவில் உள்ளது செவன்த் டே அட்வென்டிஸ்ட் உயர் நிலைப் பள்ளி. நேற்று அப்பள்ளியில் உள்ள எல்.கே.ஜி. வகுப்பறையில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியை பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கான்கிரீட் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு மொத்தமாக பெயர்ந்து விழுந்தது.
அப்போது வகுப்பறையில் இருந்த குழந்தைகள் மீது இடிபாடுகள் பட்டதில் 9 குழந்தைகள் காயம் அடைந்தனர். நடப்பது என்னவென்று தெரியாமலும், காயத்தால் வலி தாங்க முடியாமலும் குழந்தைகள் அலறத் தொடங்கினர். உடனே பக்கத்து வகுப்புகளில் இருந்த ஆசிரியர்கள் ஓடி வந்து காயம் அடைந்த குழந்தைகளை தூக்கிச் சென்றனர். பிற குழந்தைகளையும் வெளியே தூக்கிச் சென்றனர்.
சில குழந்தைகள் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அதிலும் கௌதம்(4) என்ற குழந்தையின் பெருவிரல் துண்டானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். கௌதம் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனின் துண்டான விரலும் அனுப்பி வைக்கப்பட்டது.
கௌதமின் பெருவிரலை மீண்டும் பொருத்த வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்த பிறகே அவனின் பெற்றோர் நிம்மதியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications