தரைதட்டிய கப்பல் மாலுமிகளைக் காப்பாற்றிய மீனவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: நிலம் புயலால் சென்னையில் தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பல் ஊழியர்கள் 5 பேரைக் காப்பாற்றிய மீனவர்களைப் பாராட்டி அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களை மிரட்டிய நிலம் புயலின்போது பிரதிபா காவிரி என்ற கப்பல் சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. இக்கப்பலில் இருந்த 25 ஊழியர்கள் உயிர் காக்கும் படகுகள் மூலம் தப்பிக்க முயன்றனர். ஆனால் அலையின் வேகத்தில் சிக்கி அவர்களின் படகுகள் கவிழ்ந்து அவர்கள் உயிருக்கு போராடினர். அப்போது ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் வடிவேலு, பழனி மகன் கலைமணி, வைத்தியநாதன் மகன் உதயமூர்த்தி மற்றும் கரிவரதன் மகன் மதன் ஆகிய 4 மீனவர்கள் கோபி என்பவரின் படகில் ஏறி கப்பல் மாலுமிகளைக் காப்பாற்ற கடலுக்கு சென்றனர்.
அவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சென்று உயிருக்கு போராடிய 5 மாலுமிகளைக் காப்பாற்றி கரை சேர்த்தனர். அவர்களின் தன்னலமில்லா இந்த சேவையை பாராட்டும் வகையில் அவர்கள் 4 பேருக்கும், படகு உரிமையாளரான கோபிக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications