திருப்பூரில் மின்தடை நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள 5.78 லட்சம் மின் இணைப்புகளுக்கு தினமும் 500 மெகாவாட் மின்சாரம் தேவை. மின் தேவையில் 200 மெகாவாட் வரை மின்சாரப் பற்றாக்குறை இருந்த காரணத்தால் பகலில் 8 மணி நேரமும் இரவில் 8 மணி நேரமும் மின் தடை ஏற்பட்டு வந்தது.
கடந்த மாதம் இறுதியில் நிலம் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் காற்றாலை மின் உற்பத்தியும் ஆயிரம் மெகாவாட் அதிகரித்தது. இதனால் கடந்த சில மாதங்களாக அமலில் இருந்த 16 மணி நேர மின்தடை 10 மணிநேரமாக குறைந்தது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக திருப்பூரில் மின்தடை நேரம் மீண்டும் 16 மணிநேரமாக அதிகரித்துள்ளது.
திருப்பூரில் காலை 6 மணி முதல் 9 மணி வரை இருந்த மின் தடை நேரம் காலை 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதியம் 12 மணி முதல் 6 மணி வரையிலும் பகல் நேரத்தில் மொத்தம் 8 மணிநேரம் மின் வெட்டு ஏற்படுகிறது.
மின்தடை ஒவ்வொரு ஏரியாவுக்கு ஒவ்வொரு மாதிரியாக அமல்படுத்தப்படுகிறது. ராயபுரம், ரயில்நிலையம் பகுதிகளில் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், 10 மணி முதல் 2 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் தடை செய்யப்படுகிறது.
இரவில் தூக்கம் போச்சு
இரவு நேரத்தில் 7 முதல் 8, 9 முதல் 10, என ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை காலை 5 மணி வரை ஓரு மணிநேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் தடை படுகிறது. இதனால் இரவில் கொசுக்கடியில் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர் திருப்பூர் வாசிகள்.
மின் இருப்பைப் பொருத்து ‘லோடு செட்டிங்' சென்டர் மூலம் நேரடியாக மின் நிறுத்தம் , துணை மின் நிலையங்களுக்கு உத்தரவு வருவதால், சில நேரங்களில் கூடுதல் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பகல் 8 - ராத்திரி 8!
பகலில் 8 மணிநேரம், இரவில் 8 மணிநேரம் என மொத்தம் 16 மணிநேரம் மின்சாரம் தடைபடுவதால் திருப்பூர் மாவட்ட பொதுமக்களும், பனியன் உற்பத்தியாளர்களும் கலக்கமடைந்துள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications