மேட்டுப்பாளையம் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மீது தாக்குதல்: பஸ் எரிப்பு… கடையடைப்பு

மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் ஆனந்த் வயது 37. இவர் திருப்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் செயலாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது மர்மக் கும்பல் ஒன்று திடீரென வழிமறித்து இரும்புகம்பியால் தாக்கியது. இதில் ஆனந்தன் படுகாயமடைந்தார். உடனடியாக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
பஸ் எரிப்பு, கல்வீச்சு
இதனிடையே ஆனந்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் வந்து பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும் மீண்டும் இரவு 9 மணியளவில் மறியலில் ஈடுபட்ட அவர்கள் சில பேருந்துகளின் மீதும் மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கினர். இதன்பின்னர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்துக்கு தீ வைத்தனர். அதில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
கடையடைப்பு, பதற்றம்
ஆஸ்.எஸ்.எஸ் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பதற்றம் உருவாகியுள்ளது. இதனையடுத்து இரு மாவட்டங்களிலும் இன்று கடையடைப்பு நடத்த இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் காடேஸ்வரா சுப்ரமணியன் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இரு மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் பேருந்து போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.அசாம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாத வகையில் தடுக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மறியல் செய்ய முயன்றோர் கைது
இதனிடையே ஆனந்தன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, உதகையில் ஒருவரின் கடை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கிரீன் பீல்டைச் சேந்த 2 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, உதகை மாரியம்மன் கோவில் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications