ஊழல் கட்காரியை ஆதரிப்பதா?: பாஜக உயர் நிலைக்குழுவுக்கு ராம் ஜேத்மலானி கண்டனம்
டெல்லி: பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அக்கட்சியின் உயர் நிலைக்குழுவுக்கு பாஜக எம்பியும் வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் நிதின் கட்காரி பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த எம்.பி.யும், வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி வலியுறுத்தி வருகிறார். ஆனால் நேற்று முன்தினம் கூடிய பாஜக உயர் நிலைக்குழு கட்காரிக்கு ஆதரவாக முடிவு எடுத்துள்ளது. அவரை தலைவர் பதவியில் இருந்து விலக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதற்கு ராம் ஜேத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நிதின் கட்காரியின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கட்காரி தலைவர் பதவியில் நீடிக்கலாம் என உயர்நிலைக் குழு எடுத்துள்ள முடிவு கண்டிக்கத்தக்கது. இது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இதன்மூலம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து பாஜக விலகிச் செல்கிறது.
மேலும் உயர்நிலைக்குழுவின் இந்த செயலால் ஊழலுக்கு எதிரான என்னுடைய போராட்டம் தனிப்பட்ட போராட்டமாக மாறி உள்ளது.
கட்சியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வெளிப்படையாக கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கட்டளையிடப்பட்டள்ளது. ஆனால் இந்த வாய்ப்பூட்டு மூத்த தலைவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நான் முக்கிய தலைவர் இல்லை. எனவே இது எனக்குப் பொருந்தாது.
இனிமேலும் கட்காரி விவகாரம் குறித்து நான் பேசப் போவதில்லை. ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்ற கொள்கையிலிருந்து பாஜக விலகிச் செல்கிறது என கட்சியினரை எச்சரிக்கப் போகிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் கட்காரிக்கு ஆதரவாக இருப்பதால் கட்சியிலிருந்து விலகுவீர்களா என்று என்னைக் கேட்கிறார்கள்.
கட்சி என்ன முடிவெடுத்தாலும் நான் கட்சியை விட்டு விலகப் போவதில்லை. கட்சியில் இருந்துகொண்டே தேவைப்பட்டால் தனியாகக் கூட ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு கட்சியின் மூத்த தலைவர்களுக்கு உள்ளது. ஊடகங்களில் வெளியாகும் செய்தியை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இறுதி முடிவு எடுக்கட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அத்வானிக்கு கட்காரி நேரில் பிறந்த நாள் வாழ்த்து:
இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவே கட்காரி பாஜக மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்.
மேலும் கட்காரி இன்று 85வது பிறந்தநாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவரான அத்வானியை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்வானி கட்காரியை கடுமையாக எதிர்ப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்வானி நாளை திருப்பதி வருகிறார்:
பாஜக தலைவர் அத்வானி நாளை திருப்பதி வருவதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அத்வானி நாளை காலை திருப்பதி வருகிறார். காலை 11 மணிக்கு திருப்பதியில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரான வெங்கையா நாயுடுவும் கலந்து கொள்கிறார். கூட்டத்தை முடித்துக் கொண்டு அத்வானி மாலை நேரத்தில் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்கிறார்.
நாளை இரவு திருமலையில் தங்கும் அவர் நாளை மறுநாள் காலை மீண்டும் ஏழுமலையானை தரிசித்துவிட்டு டெல்லி புறப்படுகிறார். அத்வானி வருகையையொட்டி திருப்பதி, திருமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications