குப்பைத் தொட்டியில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பெண் குழந்தை பிணம் கண்டுபிடிப்பு
சென்னை: வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் பெண் குழந்தையின் பிணம் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணாரப்பேட்டை திவான்பகதூர் குமாரசாமி தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பிளாஸ்டிக் கவர் கிடந்தது. அதில் பச்சிளம் பெண் குழந்தையின் உடல் இருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் அங்கு விரைந்து வந்து குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தொப்புள் கொடி கூட அறுக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, குழந்தை பிறந்தவுடன் அதை ஒரு கவரில் சுற்றி குப்பைத் தொட்டியில் போட்டிருக்கலாம். இதில் குழந்தை மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கள்ளத் தொடர்பில் குழந்தை பிறந்ததால் குப்பையில் வீசினார்களா அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் இப்படி செய்தார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications