கௌதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்: 39 பேர் பலி, 155 பேர் காயம், 100 பேர் மாயம்

பசிபிக் கடலின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கௌதமாலாவின் மேற்கு பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.4க பதிவாகியிருந்தது. கௌதமாலா அருகில் உள்ள மெக்சிகோ மற்றும் எல் சால்வாடரிலும் நிலநடுக்கம் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.
கௌதமாலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் 135 வீடுகள் சேதமடைந்தன. பல்வேறு கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி 39 பேர் பலியாகினர். 155 பேர் காயம் அடைந்துள்ளனர். இது தவிர 100 பேரைக் காணவில்லை என்று கௌதமாலா அதிபர் ஓட்டோ பெரெஸ் மொலினா தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து பொதுக் கட்டிடங்களில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். 73,000 வீடுகள் மின்சாரமின்றி இன்றி தவித்தன. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3க பதிவாகியிருந்தது.
கௌதமாலாவில் கடந்த 1976ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி ஏற்பட்ட 7.5 அளவிலான நிலநடுக்கத்திற்கு பிறகு தற்போது தான் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 1976ல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 23,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications