மிஷலை ஒபாமா கட்டிப்பிடித்த படம் பேஸ்புக்கில் "சூப்பர் ஹிட்" ஆனது
சிகாகோ: தனது மனைவி மிஷலை, அதிபர் ஒபாமா வாஞ்சையுடன் கட்டிப்பிடித்தபடி நிற்கும் புகைப்படம் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பெரும் ஹிட் ஆகியுள்ளது. புதிய சாதனையையும் படைத்துள்ளது.

எங்கு பார்த்தாலும் ஒபாமா செய்திகள்தான். அதிபர் தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போதுதான் ஒபாமா ஜூரம் மீடியாக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. குறிப்பாக சமூகவலைத்தளங்களில் ஒபாமா குறித்த செய்திகள், விமர்சனங்களும், கருத்துக்களும் நிரம்பி வழிந்து வருகின்றன. அதிலும் மனைவி மிஷலை அரவணைக்கும் ஒபாமாவின் புகைப்படம்தான் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
பேஸ்புக் பக்கங்களில் அதிக அளவில் விரும்பப்பட்ட படமாக இது உருவெடுத்து புதிய சாதனையையும் படைத்துள்ளது. மேலும் நான்கு ஆண்டுகள் என்று இந்தப் படத்துக்கு கேப்ஷன் கொடுத்து அத்தனை பேரும் தங்களது பக்கங்களில் பிரசுரித்து வருகின்றனர்.
இதுவரை பேஸ்புக்கில் இந்தப் புகைப்படத்துக்கு லைக் கொடுத்தவர்களின் எண்ணிக்கை 30.5 லட்சம் ஆகும். இன்னும் இது அதிகரித்துக் கொண்டே போகிறதாம். இதுவரை பேஸ்புக்கில் எந்த ஒரு படத்துக்கும் இப்படி ஒரு லைக் கிடைத்ததில்லையாம்.
உண்மையில் இந்தப் படம் லேட்டஸ்டாக எடுக்கப்பட்டதல்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் அயோவாவில் எடுக்கப்பட்ட படமாகும். ஆனால் இப்போது இந்தப் படத்துக்கு தனி கிராக்கி ஏற்பட்டு விட்டது.
சிவப்பு, வெள்ளை நிறத்தில் கட்டம் போட்ட டிரஸ்ஸில் மிஷல் இருக்கிறார். சாதாரணமான சட்டையில் ஒபாமா இருக்கிறார். இருவரது இந்த அரவணைப்புப் படம் ஓராயிரம் சேதிகளைச் சொல்வதாக உள்ளதாக இதைப் பார்த்தவர்கள் சிலாகித்துக் கூறியுள்ளனர். இந்தப் படம் எடுக்கப்பட்டபோது பிரசாரத்தில் தீவிரமாகவும், அதே சமயம் டென்ஷனாகவும் இருந்தார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தைப் பற்றி கமென்ட் அடித்து வருபவர்கள் கூடவே ஒரு தமாஷான கமெண்ட்டையும் தட்டி விடுகின்றனர். அதாவது மிஷல் போட்டுள்ள டிரஸ் ரொம்ப விலை மலிவான டிரஸ்ஸாம். அதாவது 90 டாலர்தானாம். ஆன்லைன் ஷாப்பிங் மூலம் இதை வாங்கினாராம் மிஷல்.
பேஸ்புக் மட்டுமல்லாமல், டிவிட்டரிலும் கூட இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இதுவரை 7 லட்சத்து 14 ஆயிரத்து 800 வாட்டி இதை ரீட்விட் செய்து விட்டனராம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications