மல்லையா மதுபான நிறுவனத்தின் 53% பங்கை ரூ11,166 கோடிக்கு வாங்கியது டியாகோ!

இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக டியாகோ நிறுவனம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தமானது கடந்த ஆண்டு கெய்ர்ன் நிறுவனம் வேதாந்தா நிறுவனத்துக்கு பங்குகளை விற்றதைவிட அதிக மதிப்பிலானதாகும்.
விஜய் மல்லையா
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் பெரும் நட்டத்தை சந்தித்து உரிமத்தை தற்காலிகமாக இழந்திருக்கும் விஜய்மல்லையாவுக்கு அவரது மதுபான நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் கடன் கொடுத்து மீண்டும் கிங்பிஷர் நிறுவனத்தை இயக்க வைக்கும் என்று கூறப்பட்டு வந்தது. விஜய் மல்லையாவின் நிறுவனமானது பேக்பைப்பர், ராயல் சேலஞ்ச், சிக்நேச்சர் போன்ற மதுபானங்களை ஆண்டுக்கு 9 ஆயிரம் லிட்டர் என்ற அளவில் தயாரிக்கிறது. இந்நிலையில் உலகின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமான டியாகோ, மல்லையாவின் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை முனைப்புடன் மேற்கொண்டு வந்தது.
டியாகோ
புகழ்பெற்ற ஜானி வாக்கர் விஸ்கியை தயாரிக்கும் நிறுவனம்தான் டியாகோ. இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பே மல்லையா நிறுவன பங்குகளை வாங்குவதாகக் கூறப்பட்டது. ஆனால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விவகாரத்தில் அப்படியே அமுங்கிப் போய்கிடந்தது. இந்நிலையில்தான் இரண்டு தரப்பும் மீண்டும் பேச்சுகளை முனைப்புடன் தொடங்கி இன்று முடிவடைந்திருக்கிறது.
டியாகோ நிறுவனத்தின் chief operating officer ஆக இருப்பவர் இந்தியரான இவான் மென்ஜெஸ். இவர்தான் டியாகோ நிறுவனத்தின் அடுத்த சி.ஈ.ஓ.வாக பொறுப்பேற்பார் என்ற நிலையில் மல்லையா நிறுவன பங்குகள் வாங்கப்பட்டிருக்கிறது.
பங்குகள் கைமாறினாலும் விஜய் மல்லையாவே யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவராக நீடிப்பார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications