'2ஜி': குற்றம் சாட்டப்பட்டோரின் மனுக்களை டெல்லி ஹைகோர்ட் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி: 2ஜி ஸ்பெட்க்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் மனுக்களை எந்த நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தவிர மற்ற நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றமே கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனராக இருந்த சரத் ரெட்டி உள்ளிட்ட 20 பேர் தங்களை 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந் நிலையில் 2ஜி வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிங்வி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால்,
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி டெல்லியில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த மனுக்களை விசாரித்தால் அது 2ஜி தொடர்பான வழக்கு விசாரணையை பாதிக்கும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியிருப்பதால், அது 2ஜி வழக்கு விசாரணைக்கு பின்னடைவாக இருக்கும். மேலும் 2ஜி தொடர்பான வழக்குகள் மற்ற நீதிமன்றங்கள் விசாரிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், 20 பேரின் மனுக்களையும் விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு தடை விதித்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் பேசிய நீதிபதிகள், இது தொடர்பாக சிபிஐ ஒரு மனுவை தனியே தாக்கல் செய்யலாம். அந்த மனு மீது நாங்கள் தெளிவான தீர்ப்பை தருவோம் என்றனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications