தரைதட்டிய கப்பல் பணியாளர்களைக் காப்பாற்றிய மீனவருக்கு தலா ரூ1 லட்சம்- ஜெ. வழங்கினார்!
சென்னை: நிலம் புயலால் சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் தரை தட்டிய பிரதிபா காவிரி கப்பலின் பணியாளர்களை காப்பாற்றிய மீனவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலா ரூ 1 லட்சம் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 31.10.2012 அன்று வங்கக் கடலில் வீசிய 'நீலம்' புயல் காரணமாக 'பிரதீபா காவேரி' என்ற தனியார் சரக்குக் கப்பல் தரை தட்டியது. அக்கப்பலில் இருந்த 25 பணியாளர்கள் உயிர் காக்கும் படகில் ஏறி கரை சேர முயன்றபோது, அப்படகும் கவிழ்ந்து அனைவரும் கடலுக்குள் வீழ்ந்து உயிருக்கு போராடியபோது, கடும் புயல் வீசிக் கொண்டிருந்தபோது தங்களது உயிரை துச்சமென மதித்து, கடலுக்குள் சென்று கப்பல் பணியாளர்களை மீட்டெடுத்த ஊரூர்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் வடிவேலு, கலைமணி, உதயமூர்த்தி, மதன் மற்றும் கப்பல் பணியாளர்களை காப்பாற்ற தனது படகினை அளித்த கோபி ஆகிய ஐந்து பேர்களின் வீரச் செயலையும், தன்னலமற்ற சமுதாய அக்கறையையும் பாராட்டி தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று 6.11.2012 அன்று முதல்- அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த வடிவேலு, கலைமணி, உதயமூர்த்தி, மதன் மற்றும் கோபி ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கி பாராட்டி, வாழ்த்தினார்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து நிதியினை பெற்றுக் கொண்ட மீனவர்கள், தங்களது செயலை பாராட்டி அங்கீகரித்ததோடு நேரில் அழைத்து நிதி அளித்து ஊக்குவித்த முதல்- அமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications