70 அடி கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற முயன்ற உறவினர் பலி
சேலம்: ஆத்தூர் அருகே 70 அடி கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற முயன்ற உறவினர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். அவரது மனைவி லலிதா(23). நேற்றிரவு 7 மணி அளவில் லலிதா விவசாயக் கிணறு வழியாக மாட்டை ஓட்டிச் சென்றார். திடீர் என்று மாடு முரண்டு பிடித்ததில் லலிதா நிலை தடுமாறி 70 அடி ஆழ விவசாயக் கிணற்றில் விழுந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர் சிட்டு (எ) ரவி(40) லலிதாவை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார். ஆனால் ரவி கிணற்றின் மையத்தில் குதித்ததால் அங்கிருந்த மோட்டார் மீது அவர் விழுந்தார். இதில் அவர் தலையில் அடிபட்டு நீரில் மூழ்கி இறந்தார். லலிதா கிணற்றின் ஓரமாக விழுந்ததால் காயமின்றி தப்பினார். கிணற்று சுவறில் துருத்திக் கொண்டிருந்த கற்களைப் பிடித்துக் கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள் வந்து லலிதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications